நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற ஆனந்தபுர நாயகர்கள் நினைவு சுமந்த
ஜரோப்பிய அளவிலான உதைபந்தாட்டம் 2022
நெதர்லாந்தில் 18-09-2022 ஞாயிறு அன்று ஆனந்தபுர நாயகர்கள் நினைவு சுமந்த ஜரோப்பிய அளவிலான உதைபந்தாட்டம் புரோக்கிலின் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரினை நெதர்லாந்துக் கிளையின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜெயக்குமார் அவர்கள் ஏற்றிவைக்க நெதர்லாந்து தேசியக்கொடியை இச்சுற்றுப்போட்டிக்கு நடுவராகக் கடமையாற்ற வந்த ஜோர்ஜ் குரூஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து எமது தமிழீழத் தேசியக் கொடியை நெதர்லாந்துக் கிளைப் பொறுப்பாளர் ஜெயா அவர்கள் ஏற்றிவைத்தார்
தொடர்ந்து ஆனந்தபுர மண்ணிலே எமது மண்ணின் விடிவிற்காய் ஆகுதியாகிய எமது மண்ணின் மைந்தர்களுக்கு ஈகைச்சுடர்களினை பிரான்ஸ் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கிருபா, பிரான்ஸ் சம்மேளனப் பொறுப்பாளர் சுரேஸ், நெதர்லாந்து பெண்கள் அமைப்பினர் மற்றும் நெதர்லாந்து செயற்பாட்டளர்கள் ஏற்றிவைத்தனர். பின்னர் அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து வளர்ந்தோர்கள், மற்றும் பதினைந்து வயதிற்குட்பட்டோர்களிற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரான்ஸ், சுவிஸ், பெல்ஜியம் ஜேர்மன், லண்டன் நாடுகளிலிருந்து கலந்து கொண்ட விளையாட்டுக்கழகங்கள் அடாத மழையிலும் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடி தமது கழகங்களின் வெற்றிக்காக துடிப்புடன் செயற்பட்டார்கள்.
இச்சுற்றுப்போட்டிகளில்
பதினைந்து வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டத்தில்
3ம் இடத்தினை அம்ஸ்ரடாம் விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை சுவிஸ் விளையாட்டுக் கழகமும்
1ம் இடத்தினை பிரான்ஸ் விளையாட்டுக் கழகமும்
பெற்றுக் கொண்டன
வளர்ந்தோருக்கான உதைபந்தாட்டத்தில்
3ம் இடத்தினை பிரான்ஸ் விண்மீன்கள் விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை பிரான்ஸ் யாழ்;ரன் விளையாட்டுக் கழகமும்
1ம் இடத்தினை பிரான்ஸ் ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகமும்
பெற்றுக் கொண்டன
மக்களின் ஆரவாரத்துடனும் கரவொலிகளுடனும் நடைபெற்ற இந்த உதைபந்தாட்டம் சுமார் 20.00மணியளவில் வெற்றிபெற்ற கழகங்களிற்கு வெற்றிப் பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசில்கள் வழங்கப்பட்டு இறுதியில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.