நேற்று சிறீலங்காவில் 55 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது. 22 பெண்களும் மற்றும் 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளது.