நேற்று செம்மணியில் 16 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம்!

You are currently viewing நேற்று செம்மணியில் 16 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம்!

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள், நேற்று 19ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

திங்கட்கிழமை (08) வரையான அகழ்வுப் பணிகளின்போது, மொத்தம் 318 மனித எலும்புக்கூடுகள் (என்புத் தொகுதிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அடையாளக் குறியீடுகள் இடப்பட்ட பின்னர் அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை (08) மட்டும் 4 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி. நிரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை, ருகுணு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு மற்றும் உதவியுடன் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணியின்போது, தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply