வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 53 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது
அவற்றின் அடிப்படையில்,
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர்,
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றாமையே தொடர்ந்தும் கொரோனாப் பரவல் அதிகரித்துவருவதற்கு காரணம் என்று சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.