மதுபான சாலைகள் திறப்பு – ஊரடங்கில் கொடிப் பறந்த வியாபாரம்!

You are currently viewing மதுபான சாலைகள் திறப்பு – ஊரடங்கில் கொடிப் பறந்த வியாபாரம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், மதுபானசாலைகள் நேற்று திறக்கப்பட்டதால் நாடு முழுவதும் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுபான கொள்வனவில் ஈடுபட்டனர். அங்கு வரிசையில் நிற்போர் அல்லது முண்டியடித்து கொண்டு நிற்போரில் பலர் எவ்விதமான சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

மதுபான சாலைகளுக்கு சென்று நீண்ட வரிசைகளில் நிற்போர், ஒரு மீற்றர் இடைவெளியை பேணவில்லை.ஆகையால், கொரோனா வைரஸ் கொத்தணிகளுக்கு அப்பால், “மது கொத்தணி” உருவாகுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

எனினும், அங்கு கடமையில் இருக்கும் பொலிஸார், இருவருக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதற்கான கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலும் அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்தனர். மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments