2009 இறுதிப்போரில் அகப்பட்டு, அங்கிருந்து தப்பி அகதியாக வந்து நோர்வேயில் தஞ்சம் கோரிய கொலின் குடும்பத்தினர் 11 ஆண்டுகளாக புகலிட விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில் நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்திற்குள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.
2009 இலிருந்து, முதல் 5 ஆண்டுகள் புகலிட முகாமிலும் – இறுதி 6 ஆண்டுகள் வட நோர்வேயின் Finnsnes எனும் கிராமத்திலுள்ள தேவாலயத்திலும் தஞ்சமடைந்து அவர்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கு எவ்விதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை என்பதையும் – உயிராபத்து மிக்கது என்பதை உறுதிப்படுத்தும் புதிய தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வெளிக்கொணரப்பட்டுள்ள போதும் அவர்களின் முறையீடுகள் எதுவும் வெற்றிபெறவில்லை. அதனை நோர்வே அரசாங்கம் மதிப்பீடு செய்வதில் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. இப்போது வழக்கு உயர் நீதி மன்றத்திற்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் புகலிட தஞ்சம் வழங்குமாறு நோர்வே அரசாங்கத்திற்கு பல வழிகளிலும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் நோர்வேயில் உள்ள கிறீஸ்தவ ஆயர்கள் அனைவரும் இணைந்து இவர்களுக்கு ஒரு பொது மன்னிப்பை அளிக்குமாறு நோர்வே அரசாங்கத்திற்கு ஒரு மனு நேற்று (07.12.2020) அளிக்கப்பட்டது.
அதனுடன் இந்தக் கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இருக்கும் ஆலய நிர்வாகத்தினரால் இணையவழி ஆதரவுக் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த குடும்பத்திற்கு எம்மால் முடிந்த இந்த கையெழுத்து ஆதரவை இயன்றவரையில் உணர்வுத்தோழமையோடு பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்பதை மிகவும் உரிமையுடன் கேட்டு கொள்கிறோம்.
இங்கே இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதனை அழுத்தி உள்ளே சென்று உங்கள் ஆதரவை கொடுத்து உதவுங்கள். உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.
https://www.opprop.net/6arernok_-_gi_amnesti_til_familien_collin_etter_6_ar_i_kirkeasyl