நோர்வேயில் ஆரம்பித்துள்ள உலக உள்ளரங்க உதைபந்தாட்ட தமிழீழ சுற்றுக்கிண்ணம்!

You are currently viewing நோர்வேயில் ஆரம்பித்துள்ள உலக உள்ளரங்க உதைபந்தாட்ட தமிழீழ சுற்றுக்கிண்ணம்!

2003 ஆம் ஆண்டு தமிழீழத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ தேசிய உதைபந்தாட்ட  அணி பல வெற்றி வாகைகளை சூடி தமிழீழ மண்னுக் பெருமை சேர்த்ததை தொடர்ந்து தமிழீழ உதைபந்தாட்ட தேசிய அணி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு விசா வழங்க மறுத்து முடக்கியது சிங்கள அரசு

அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நாடுகளோடு போட்டியிட்டு வெற்றி வாகை சூடிவருவது யாவரும் அறிந்ததே

அதன்  தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட விளையாட்டுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக நோர்வேயில் உலக உள்ளரங்க உதைபந்தாட்ட தமிழீழ சுற்றுக்கிண்ணத்தின் முதலாம் நாள் இன்று ஒசுலோவில் காலை 830 இற்கு ஆரம்பித்துள்ளது.

இதே நேரம் நாளையும் போட்டிகள் ஆரம்பிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உலகநாடுகளில் இருந்து பங்கெடுத்துள்ள அணிகள் தங்களின் அபார திறமைகளை களத்திலே காண்பித்துக்கொண்டிருக்கின்றார்கள் மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன அத்தோடு தமிழீழ உணவகத்தின் சுவைதரும் உணவுகளும் தயார்செய்யப்பட்டு பார்வையாளர்கள் போட்டியாளர்களின் பசியை போக்க பணியாளர்கள் தங்களின் தாயகப்பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நடைபெறும் இடம்:

Jesshiem flerbrukshall

Aktivitetsveien 9

2069 Jesshiem

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments