பொய்யா விளக்கு தமிழின அழிப்பின் ஆவணத்திரைப்படம் தமிழ்முரசத்தின் ஆதரவோடு உணர்வோடு நேற்று திரையிடப்பட்டது 150இற்கு மேற்பட்ட உணர்வாளர்கள் இத்திரைப்படத்தினை பார்வையிட்டனர்.எமது மக்கள் சிறீலங்கா பேரினவாத அரசாலும் அதன் முண்டு சக்திகளாலும் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது களத்திலே நின்று மருத்துவப்பணியாற்றிய மருத்துவரின் நேரடிசாட்சியமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.