நோர்வேயில் உலக உள்ளரங்க உதைபந்தாட்ட தமிழீழக்கிண்ணம்!

You are currently viewing நோர்வேயில்  உலக உள்ளரங்க உதைபந்தாட்ட தமிழீழக்கிண்ணம்!

நோர்வே வாழ் தமிழ் மக்களே , வணக்கம்!

எதிர்வருகின்ற பெப்ரவரி 24 மற்றும் 25 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே,
ஒழுங்கமைத்து நடாத்தும் “TEFA FUTSAL WORLD CUP 2024” இங்கு ஒஸ்லோவில் “Jessheim” உள்ளரங்க மைதானத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது என்பதை அறியத்தருகின்றோம் .

கனடா நாடு உட்பட மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிணைந்த ஆதரவுடன் இந்த போட்டி முன்னெடுக்கப் படுகிறது. நோர்வேயில் மட்டும் பதின்மூன்று கழகங்கள் பங்குபற்றுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து பதினைந்துக்கும்
மேற்பட்ட அணிகளும் ,அத்துடன்
பெண்கள் பிரிவுக்கான அணிகளும், மற்றும் 17 வயதுக்கு உற்பட்ட அணிகளும் இங்கு வருகை தர இருக்கின்றனர் .

இந்த விளையாட்டை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் நோர்வேயின் 7 வயதுக்கும் , 9 வயதுக்கும் உற்பட்ட பிரிவிற்க்காக “TEFA KIDS WORLD CUP ” நடைபெற இருக்கிறதென்பதையும் அறியத்தருகின்றோம்.

தமிழீழ உணவகத்தின் உணவு சேவைகளும் வருபவர்கள் அனைவருக்கும் நாவிற்கு ருசியாக வழங்குவதற்க்கான தயார்படுத்தல்கள் நடந்துகொண்டு இருக்கிறது .

இந்த “TEFA FUTSAL WORLD CUP 2024” போட்டிக்கு நிதியுதவி (sponsor) செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் எங்களைத் (TCC Sports) தொடர்பு கொள்ளலாம், இவ் போட்டிக்கு நிதியுதவி வழங்கி ஆதரவுதரும் அனைத்து நிறுவனங்களின்
விளம்பரங்களும் வருவோர்களின் பார்வைக்காக திரையில் காட்டப்படும் .

முதல் முறையாக நோர்வேயில் உலக கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்ட போட்டி நடைபெற இருப்பதால் . இதற்கான ஆதரவுக்கரங்களை தந்து உதவுமாறு நோர்வே தழுவிய அனைத்து தமிழ் விளையாட்டு கழகங்களை கேட்டுக் கொள்கிறோம்.

நோர்வே வாழ் தமிழ் மக்களையும் , மற்றும் அனைவரையும் இந்த போட்டியை வந்து பார்வையிட்டு செல்லுமாறு அழைக்கிறோம் .

ஒழுங்கமைப்பு:
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நோர்வே

தமிழ் இளையோர் அமைப்பு ,நோர்வே

ஆதரவு:
TEFA

பங்கெடுக்கும்  நாடுகள்:
UK, France, Swiss, Denmark,
Germany, Netherlands, Belgium, Italy, Finland, & Canada

பகிர்ந்துகொள்ள

Leave a Reply