நோர்வேயில் இப்போது மொத்தம் 1077 கொரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர் என்று நோர்வே Folkehelseinstituttet (FHI) தனது தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது. நோர்வேயில் 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகின்றது.
VG யின் கண்ணோட்டத்தின்படி, நோர்வேயில் இப்பொழுது குறைந்தது 1196 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. VG ஆனது FHI ஐ விட அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, ஏனெனில் பல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளூர் செய்தித்தாள்கள் வெளிவிடும் புதிய தொற்று எண்ணிக்கைகளை உடனுக்குடன் தொடர்ந்து பதிவுசெய்து புதுப்பிப்பதாகும் – VG
ஆதாரம்/ மேலதிக தகவல் : VG