கொரோனா தொற்று காரணமாக இன்று, புதிதாக நபர் ஒருவர் இறந்துவிட்டதாக ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை(OUS) தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இது நோர்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது மரணமாகும்.
ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையின் கூற்றுப்படி, அந்த நபர் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்படட வயோதிப நோயாளி ஆவார்.
இது OUS இல் நடந்த இரண்டாவது கோவிட் -19 மரணமாகும். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை எங்களால் வழங்க முடியாதுள்ளது என்று அவர்கள் ட்விட்டர் செய்தியில் எழுதியுள்ளார்கள்.
ஆதாரம்/ மேலதிக தகவல்: Dagbladet