ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும் அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய அரசு அதிகவனம் செலுத்தவேண்டும் என்பதை முன்னிறுத்தி நோர்வேத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நோர்வே பாராளுமன்றம் முன்பாக நடைபெற்றது.
இன்று 14.03.2021 ஞாயிறு மு.பகல் 11: 00 – 12:00 மணி வரை இப்போராட்டம் நடைபெற்றது.
உறவுகளே அம்பிகை அவர்களின் கோரிக்கை மனுவில் ஒப்பமிட இந்த இணைப்பினை அழுத்தவும்
http://stoptamilgenocide.com/
ஒழுங்குகள்:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு




