நோர்வேயில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது! மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!!

You are currently viewing நோர்வேயில் பாடசாலைகள்  தற்காலிகமாக மூடப்பட்டது! மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!!

“கொரோனா” வைரஸ் தாக்கம் காரணமாக, நோர்வேயில் “Oslo International School” எனப்படும் ஆங்கிலமொழிப்பாடசாலை மூடப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தலைநகர் Oslo வை அண்டியுள்ள Bærum என்ற இடத்தில் அமைந்திருக்கும் மேற்படி சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவயது மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், காலவரையறையின்றி பாடசாலை மூடப்படுவதாக, பாடசாலை நிர்வாகம் தனது Facebook சமூகவலைத்தளம் மூலமாக தெரிவித்துள்ளது.

ஒரேயொரு மாணவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பாடசாலை நிர்வாகம், பாடசாலை மூடப்பட்டதால் பெற்றோர் கலக்கமடைய வேண்டாமெனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே பாடசாலையை தற்காலிகமாக மூடும் முடிவை தாம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நோர்வேயின் இன்னொரு பெருநகரமான Stavanger நகரிலும் இன்னுமொரு பாடசாலை இதே காரணத்துக்காக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள