நோர்வேயில் கொரோனா வைரஸால் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் Bjørn Guldvog இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
“அடுத்த சில நாட்களில், மக்களிடையே கொரோனா வைரஸ் கூடுதலாக பரவும் அபாயத்தை நாங்கள் எதிர்பார்க்கலாம்” என்று Guldvog மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் 113 மற்றும் 116 117 போன்ற அவசர தொலைபேசி எண்களை அழைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்பட்டால், நிச்சயமாக நீங்கள் அவசர எண்களுக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.