நோர்வேயின் ஆளுமைக்குட்பட்ட “Svalbard” தீவில், கடலுக்கடியில் கனிமவளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 1000 மில்லியார்டர் நோர்வீஜியன் குரோணர்கள் பெறுமதியான இந்த இயற்கை வளமானது, செப்பு, நாகம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களை உள்ளடக்கி இருக்கிறது.
நோர்வேயின் பிரபலமான இயற்கை அறிவியல் பல்கலைக்கழகமான “NTNU” வின் ஆய்விலேயே இந்த இயற்கைவளம் கண்டறியப்பட்டுள்ளது.
கடலடியில், பூமியின் வெடிப்புக்களூடாக மேலே வந்திருக்கக்கூடிய இந்த இயற்கைவளம், உலகின் மிகப்பெரும் பணக்காரநாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள நோர்வேயின் பொருளாதாரத்தை மேன்மேலும் உயர்த்தும் என நம்பப்படுகிறது.