நோர்வேயில் நிகழ்ந்த முதலாவது “கொரோனா” மரணம் பற்றி, பிரதமர் “Erna Solberg” அம்மையார் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுகவீனமுற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த வயதான நபரொருவரே மரணமடைந்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபரின் மரணம் தொடர்பில், பிரதமரும், சுகாதார அமைச்சரும் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
“கொரோனா” பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்றையதினம் அரசாங்கம் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் நோர்வேயில் முதலாவது “கொரோனா” மரணம் நிகழ்ந்திருப்பது, நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.