நோர்வேயில் மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை நோர்வேயின் பொது சுகாதார நிறுவனம் (Folkehelseinstituttet) இன்று வியாழன் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த நபர்களில் இருவர் ஒஸ்லோவிலும், மூன்றாவது நபர் Bærum நகரிலும் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் மூவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் இதனால் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்களில் இருவருக்கு இத்தாலியிலும், மூன்றாவது நபருக்கு ஈரானிலும் இருந்தே இந்த தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்:- NRK