காவல்துறைத் தலைவர் Benedicte Bjørnland கூறுகையில், இதுவரை காவல்துறையினர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் அவசரகால பாதுகாப்புத் தயார்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளதுஎன்றும் கூறியுள்ளார்.
காவல்துறை, பாதிப்பு பகுப்பாய்வு மற்றும் தற்போதைய மதிப்பீடுகள் போன்றவற்றை செய்து வருகின்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ளதுடன், இதன் விளைவாக, முக்கிய அவசியம் இல்லாத வகுப்புகள், கூட்டங்கள், பயணம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மூன்று காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் துணை இயக்குநர் Tone Vangen கூறியுள்ளார்.
ஆதாரம்/ மேலதிக தகவல்:- Dagbladet.