தமிழர்களின் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சியின்(SV)பாராளுமன்ற உறுப்பினர் kariekaski அவர்களை தமிழீழ அனைத்துலக ராசதந்திரக்கட்டமைப்பு சந்தித்திருந்தது..
சிங்களமயமாக்கலின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து கவலைகளை எழுப்பியதுடன் தமிழ் தமிழின அழிப்பிற்கான நீதிச் செயல்முறையில் நோர்வே பாராளுமன்றத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் நோர்வேயின் முக்கியத்துவம் தொடர்பாகவும் தமிழீழ அனைத்துலக ராசதந்திரக்கட்டமைப்பால் விவாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது..
ஜநாவின் மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி செலுத்தவேண்டிய கடப்பாடு பற்றி விவாதித்ததோடு தமிழீழ மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட இன அழிப்பு போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான பிற குற்றங்களை விசாரிக்க வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியம் குறித்தும் வலுயுறுத்துமாறு இச்சந்திப்பினூடாக தமிழீழ அனைத்துலக ராசதந்திரக் கட்டமைப்பால் வலியுறுத்தப்பட்டுள்ளது.