பிரித்தானிய மகாராணி எலிஸபெத் அவர்கள், தனது வழமையான வசிப்பிடமான “பக்கிங்ஹாம்” அரண்மனையை விட்டு, “வின்ஸர்” கோட்டைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
93 வயதாகும் மகாராணியாருக்கு “கொரோனா” தொற்று ஏற்படும் பட்சத்தில், அவரதுஉடல்நிலைக்கு பாதகம் ஏற்படலாமென அஞ்சப்படுவதால் எதிர்வரும் ஈஸ்டர் தவக்காலம் முடியும்வரை மகாராணியார் “வின்ஸர்” கோட்டையிலேயே தங்க வைக்கப்படுவாரெனவும்தெரிவிக்கப்படுகிறது.
இதனால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மகாராணியாரின் அனைத்து நிகழ்வுகளும்நிறுத்தப்படுவதாகவும், மே மாதத்தில் “பக்கிங்ஹாம்” அரண்மனையில் நடைபெறவிருந்த அரசகுடும்பத்து களியாட்ட விழாவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படைகிறது.
எனினும், ஈஸ்டர் தவக்காலத்தில் மகாராணியார் வசிப்பிடம் மாறிச்செல்வது வழமை என்றாலும், இம்முறை அவரது வசிப்பிட இடமாற்றத்தில் “கொரோனா” பரவல் பிரதான காரணியாக இருப்பதைமறுப்பதற்கில்லை எனவும், எதிர்வரும் வியாழக்கிழமை 19.03.20 அன்று இந்த இடமாற்றம் நடைபெறுமெனவும் அரண்மனை வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்திகள்வெளியாகியுள்ளது.