சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கோசங்களை எழுப்பினர்.
அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர்.
அரச அதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
![படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! 1](https://www.seithy.com/siteadmin/upload/jaffna-demo-040524-seithy%20(3).jpg)
![படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! 2](https://www.seithy.com/siteadmin/upload/jaffna-demo-040524-seithy%20(4).jpg)
![படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! 3](https://www.seithy.com/siteadmin/upload/jaffna-demo-040524-seithy%20(5).jpg)
![படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! 4](https://www.seithy.com/siteadmin/upload/jaffna-demo-040524-seithy%20(1).jpg)