யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நேற்று இரவு துணைவேந்தர் தலைமையில் தகர்த்து அழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவாளர் சுகாஸ் உள்ளிட்ட பல்லை மாணவர்கள் திரண்டதால் பதட்டம் ஏற்றபட்டுள்ளது.
இன்னிலையில் இரவோடு இரவாக படையினர் குவிக்கப்பட்டு பொலீசார் குவிக்கப்பட்டு சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பல்கலைக்கழகம் முழுதும் துப்பாக்கி ஏந்திய படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மாணவர்கள் வாயல் கதவில் நின்று தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
போர்குற்றத்தினை மூடிமறைக்கும் செயற்பாட்டில் சிங்கள அரசு ஈடுபட்டு வரும் வேளை அதற்கு துணையாக பல்கலைக்கழக துணைவேந்தரும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்த பொலீசார் கொரோனா சட்டத்தினை கையில் எடுத்து ஒலிபொருக்கி மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தாயகம் புலம்பெயர் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தெற்கில் பல்கலைக்கழகங்களின் அனுமதி இன்றி ஜே.வி.பியின் நினைவு சிலைகள் கட்டப்பட்டு காணப்படும் நிலையில் வடக்கில் உள்ள முள்ளிவாய்க்கால் சிலைதான் சிங்கள அரசினை அச்சம் கொள்ளவைத்துள்ளது.
சிங்கள அரசின் இந்த அடக்குமுறையினை ஜ.நா மனிதஉரிமைகள் கூட்டத்தொடருக்குள் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ளது இனிவரும் காலத்தினை சரியாக எதிர்கொண்டு சிங்கள அரசினை சர்வதேச குற்றவியல் கூண்டில் நிறுத்தவேண்டும் .