யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே விபத்து ஏற்பட்டது. மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டாமோதி மாவிட்டபுரத்தில் விபத்து – இளைஞன் பலி!
