யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. காணாமல் போனவரை தேடும் பணி தொடர்கிறது. பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதம் (வயது-31) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிந்திக்கிடைத்த செய்திகளின்படி
யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து காணாமல்போயுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை, பண்ணை பகுதியிலிருந்து குறித்த இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)