பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ள கேரள மக்கள்!

You are currently viewing பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ள கேரள மக்கள்!

இஸ்ரேலில் சிக்கிய கொண்டுள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், இதில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து வெளிநாட்டினரையும், இஸ்ரேலியர்களையும் பிணைக் கைதிகளாக காசாவில் கடத்தி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பல நாடுகளும் இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினரை உடனடியாக வெளியேறியுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவும் இஸ்ரேலில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக இங்குள்ள கேரள மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருப்பதாக இஸ்ரேலில் 8 ஆண்டுகளாக செவிலியராக பணி புரியும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷைனிபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், பாலஸ்தீன அமைப்பினர் இங்கு வன்முறையை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன, ஆனால் இந்த முறை மோதல் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இங்கு நிறைய கேரள மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் செவிலியராகவும், முதியோர் பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், உயிருக்காக பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். தானும் இப்போது பதுங்கு குழியில் தான் இருக்கிறேன் என ஷைனிபாபு தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply