பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தை அடுத்து முதல்வர் காணொளி வாயிலாக பொதுத்தேர்வு தொடர்பாக உரையாற்றினார். அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், ஒத்திவைக்கப்பட்ட 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவித் துள்ளார்.
பிளஸ் 2 மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளதுடன், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளார்.