கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்னர்
கைதான சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.