பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் மீது ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

You are currently viewing பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் மீது ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் மீது ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுவரையான தரவுகளின் அடிப்படையில், தமக்கு இதில் சந்தேகமே இல்லை என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மேக்ரான், அதில் சந்தேகமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை இதுபோன்று அவர் இன்றுவரை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை என்றே கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் நீளும் போர்,

காஸாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் போர் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

இதனிடையே, கடந்த மாதங்களில் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மேக்ரான் எடுத்துள்ளார், மாஸ்கோ தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சபதம் செய்துள்ளார்.

மட்டுமின்றி, ஐரோப்பிய துருப்புக்கள் ஒரு நாள் உக்ரைனுக்கு செல்லக்கூடும் என்பதை நிராகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிராக விரோதத்தைத் தூண்டும் நோக்கம் பிரான்ஸ் நிர்வாகத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி மேக்ரான் விளக்கமளித்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவின் தவறான தகவல் பரப்பும் முயற்சிகளுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மேக்ரான் அரசாங்கம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments