பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

You are currently viewing பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு

கண்ணீர் வணக்கம்.

தாயக விடுதலைப்பாடல்கள் பலவற்றை எழுச்சிபூர்வமாகப்பாடி,  விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் 04.02.2023 அன்று ஓய்ந்துபோனது. இந்திய ஆக்கிரமிப்புப்படைகள் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்தவேளை, இந்திய அரசிற்கு எதிராகச் செயற்பட பல உணர்வாளர்கள் தயங்கியநிலையில் துணிவுடன், தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் அவர்களின் நினைவு சுமந்த பாடலுடன் ஆரம்பித்து எழுச்சிப்பாடல்களைப்பாடி தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்தவராவார்.

“பாடும் பறவைகள்  வாருங்கள்” என்ற பாடலுடன் ஆரம்பித்து, களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் “வீசும் காற்றே தூதுசெல்லு”  “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்”என்னும் பாடல்கள், பாசறைப்பாடல்கள் ஒலிநாடாவில்  “பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம்”, “மேகங்கள் இங்கு வாருங்கள்”, “வீரன் மண்ணில் புதையும்போது” என்ற பாடல்களுடன்,  “தலைவாரிப் பூச்சூடினேன்”,  “செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் பிரபாகரன்” போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தமிழீழ விடுதலைக்காகக் குரல்கொடுத்த  வாணி ஜெயராம் அம்மா அவர்கள் தனது 78 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

வாணி ஜெயராம் அம்மாவின் இழப்பு இட்டு நிரப்பமுடியாதது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், தனது குரலால் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த  பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு  எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் - அனைத்துலகத் தொடர்பகம் 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments