பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு!

You are currently viewing பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு!

பின்லாந்திற்கு வருகை தந்திருக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு,செ,கஜேந்திரன் அவர்கள் ,கடந்த இரண்டு தினங்களாக, பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர். திரு. பெக்கா காவிஸ்தோ. உட்பட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்புப் பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்கப் பிரதிநிதிகளையும். பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் பின்லாந்திலுள்ள, மனிதவுரிமை மேம்பாட்டு விடயங்கள் சார்ந்து பணியாற்றும் .முக்கியமான அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். இச்சந்திப்புக்களை, அனைத்துலக ராஜதந்திரக்கட்டமைப்பான , IDCTE(international diplomatic council of tamil eelam) ஒழுங்கு செய்ருந்தது. IDCTE இன் பின்லாந்துப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். இச்சந்திப்புக்களின் போது, தாயகத்தில் எமது மக்கள் படும் இன்னல்களையும், சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு சார்ந்தும். தெளிவாக விளக்கமளித்தார். அண்மைய நாட்களில் நடைபெற்ற சந்திப்புக்கள். தாயகத்தில் எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து. பின்லாந்து அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து , ஜெனிவா மனிதவுரிமைப் பேரவையில் தனது தெளிவான அழுத்தங்களைக் கொடுக்கும் எனவும் , வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 1
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 2
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 3
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 4
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 5
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 6
பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழர் தரப்பு! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments