பிரபல திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

You are currently viewing பிரபல திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது-54) மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பிரபல தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

54 வயதாக கே.வி. ஆனந்த், கனா கண்டேன், கோ, மாற்றான், காப்பான், அயன், கவண், அநேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

காதல் தேசம், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.வி.ஆனந்த், சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்றவராவர்.

கடந்த சில மாதங்கள் தமிழ் திரையுலகிற்கு சோதனைக் காலமாக அமைந்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ஆண்டு காலமான நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த் இன்று மாரடைப்பால் இறந்துள்ளமை தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply