கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று, சாவு மற்றும் மருத்துவமனை நிலவரங்கள் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 7.373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 942 105 பேருக்கு இதுவரை பிரான்சில் தொற்று ஏற்பட்டுள்ளது. PCR அடிப்படையினான தொற்று வீதம் 1,7% வீதமாக குறைவடைந்துள்ளது.
371 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 070 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த 24 மணிநேரத்தில் 81 பேர் அனுமதிக்கப்பட, தற்போது இங்கு 1 891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
66 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115 943 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 89 164 பேர் மருத்துவமனையிலும், 26 779 பேர் மருத்துவ இல்லங்கள், முதியோர் காப்பகங்களிலும் (ehpad) சாவடைந்துள்ளனர்.