பிரான்சிலிருந்து கர்ப்பிணி மனைவியை பார்க்க வந்தவர் விபத்தில் மரணம்!

You are currently viewing பிரான்சிலிருந்து கர்ப்பிணி மனைவியை பார்க்க வந்தவர் விபத்தில் மரணம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று இடம்பெற்றது.

இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

பிரான்சிலிருந்து வருகை தந்த சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு திருமணம் முடித்து பின்னர் பிரான்சிற்கு சென்றுள்ளார்.அவருடைய மனைவி பிரான்ஸ் செல்ல முடியாத காரணத்தால் இங்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்ப்பதற்காக பிரான்சிலிருந்து குறித்த இளைஞன் வருகை தந்துள்ளார். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply