மே-18 தமிழின அழிப்பு நாள்
நினைவாக புளோமினில் நகரத்தில் நினைவுத்தூபி இன்று 17-05-2020 திறந்து வைக்கப்பட்டது.
புளோமினில் நகர முதல்வரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி நகரசபை உறுப்பினர் திரு. கிங்ஸ்ரன் ஞானநாயகம் அவர்களின் ஒழுங்கமைப்பில்
புளோமினில் நகர பிதாவினால் இன்று திறந்து வைக்கப்படது.
தற்போதுள்ள காலச்சூழ்நிலையிலும் நகர பிதாவினதும் நகரசபை உறுப்பினரதும் பெரும் முயற்சியால் நிகழ்வு உணர்பூர்வமாக நடைபெற்றது.
பொதுச்சுடரினை மாவீரன் லெப்டினட் கதிர்வேலன் அவர்களது சகோதரன் ஏற்றி வைத்தார்.
ஈகச்சுடரினை முள்ளிவாய்கால் பேரவலத்தில் தனது சகோதரன் மற்றும் உறவினர்களை இழந்த உறவு ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து தமிழீழ மண்மீட்ப்பு போரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீர்களுக்கும் இலங்கை இந்தியப்படைகளாலும் இரண்டகர்களாலும்
படுகொலை செய்ப்பட்ட பொதுமக்களுக்காகவும் இனவழிப்பில் கொல்லப்பட்ட எம்முறவுகளுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து புளோமினில் நகரத்தில் எம்மினத்தின் அடையாளமாக இனவழிப்பின் ஆதாரமாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. நகர பிதா, நகரசபை உறுப்பினர்கள், புளோமெனில் தமிழ்சங்கங்கள், தமிழ் தேசிய கட்டமைப்புகளின் பிரதிநிதிகள்,புளோமெனில் வாழ் தமிழ் மக்கள், என நூற்றுக்கணக்காணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு மாவீர கண்மணிகளும் எம்முறவுகளுக்கும் சுடரேற்றி மலரஞ்சலி செய்தார்கள்.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் நகர பிதாவினதும் நகரசபை உறுப்பினரதும் அயராத உழைப்பின் நிமித்தம் அன்று புளோமெனில் நகரில் இனவழிப்பை நினைவு செய்யும் பிரமாண்டமான நினைவுத்தூபி எம் இனத்தின் பெயரையும் தேசத்தின் விடுதலைக்கான கனவையும் தாங்கி நிற்கிறது.
இவ்வேளையில் புளோமெனில் நகரபிதா மற்றும் நகரசபை சார்ந்த அனைவருக்கும் எம்மினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் திரு. கிங்ஸ்ரன் மற்றும் அனைத்து புளோமெனில் தமிழ் சங்களுக்கும், எம் முறவுகளுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளை பகிர்கின்றோம்…
புளோமெனில் வாழ் தமிழ் மக்கள்