பிரான்சு திரான்சி நகரில் திரான்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டது . அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
இந்நிகழ்வில் திரான்சி மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
















