தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களின் தமிழ்மக்களுடனான சந்திப்பு 25.10.2023 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் நகரில் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
தாயகத்தின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் அரசியல் சனநாயக ரீதியில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்திருந்தார். அதன் பின் மக்கள் தொடுத்த கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். இன்று பிற்பகல் மாநகர முதல்வர், மற்றும் செயலாளர், வெளிநாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்களுடனும், சந்திப்பையும் செய்திருந்தார். இன்றைய பிரான்சு அரசியல்வாதிகளுடனான சந்திப்பில் மக்கள் பேரவை, மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 24 ஆம் நாள் காலை சந்திப்பில் சார்சல் முதல்வர் மற்றும் அரசியல் வாதிகளோடும், பிற்பகல் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் வெளிநாட்டு அமைப்பின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தது.
25 ஆம் நாள் நடைபெற்ற தமிழ்மக்களுடனான சந்திப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள், தாயகச்செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் காலத்தின் தேவையை உணர்த்தும் கருத்துக்கள் மக்களை சென்றடைந்ததை இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட மக்களின் பேச்சிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. இரண்டரை மணிநேர மக்கள் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.