பிரான்சில் 395 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர்!
இன்று(19) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை
கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 227 பேர் ,வயோதிப இல்லங்களில் 168 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்தியசாலைகளில் 12.069 பேர்,வயோதிப இல்லங்களில் 7.649 பேர் சாவடைந்துள்ளனர் .
மொத்தமாக பிரான்சில் 19.718 பேர் சாவடைந்துள்ளனர்.
மொத்த தொற்று எண்ணிக்கை 112.606 பேர் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன(வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மையங்களில் 63.336)
30.639 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,5.744 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
36.578 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.