பிரான்சுக்கான எரிவாயு வழங்கலை நிறுத்திய ரஷ்யா!

You are currently viewing பிரான்சுக்கான எரிவாயு வழங்கலை நிறுத்திய ரஷ்யா!

ஐரோப்பாவின் பிரதான நிறுவனத்திற்கு எரிவாயு வழங்குவதை மொத்தமாக நிறுத்துவதாக ரஷ்யாவின் Gazprom நிறுவனம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை முதல் எரிவாயு வழங்கல் தொடராது என Gazprom அறிவித்துள்ள நிலையில், குளிர்காலத்துக்கான ஐரோப்பாவின் எரிசக்தி வழங்கல் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 2ம் திகதி வரையில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் ஜேர்மனிக்கான எரிவாயு வழங்கல் நிறுத்தப்படுவதாக Gazprom அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 1ம் திகதி முதல் பிரான்சுக்கான எரிவாயு வழங்கலை நிறுத்துவதாகவும் தொடர்புடைய நிறுவனம் முழு தொகையையும் செலுத்தும் வரையில் இது தொடரும் எனவும் Gazprom நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரான்சின் Engie நிறுவனம் ஜூலை மாதத்திற்கான தொகையை இதுவரை செலுத்தவில்லை என்றே Gazprom நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், Nord Stream திட்டத்தில் 9% பங்குகளை கொண்ட Engie நிறுவனம் இது தொடர்பில் கருத்து கூற மறுத்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் Engie நிறுவனத்திற்கு எரிவாயு வழங்கல் கணிசமாக குறைத்துள்ளது ரஷ்யா. இந்த நிலையில், எரிவாயு வழங்கலை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்தி பழிவாங்குவதாக பிரான்சின் எரிசக்தி துறை அமைச்சர் Agnes Pannier-Runacher தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply