பிரான்சை வந்தடைந்ந நீதிக்கான ஈருருளிப்போராட்டம்!8ம் நாள்

You are currently viewing பிரான்சை வந்தடைந்ந நீதிக்கான ஈருருளிப்போராட்டம்!8ம் நாள்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நெதர்லாந்தில் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,எழுச்சியோடு பயணித்து பெல்சியம் நாட்டினை ஊடறுத்து பல சந்திப்புக்களோடு பயணித்து,luxemburg மாநகரம்,வெளிவிவகார அமைச்சில் மனுக்கைளிக்கப்பட்டு,யேர்மனி நாட்டிற்குள் பயணித்து,Dillingen, Saarbrücken நகரங்களை ஊடறுத்து சந்திப்புக்கள் மற்றும் மனுக்கையளிப்புக்களைத் தொடர்ந்து Landau மாநகரிலிருந்து karlsruhe நோக்கிப் பயணித்து மாலை நிறைவடைந்தது.

8 ஆம் நாளாகி இன்று,காலை (07.09.2024) 9மணியளவில் karlsruhe மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,பிரான்ஸ் எல்லையினைக் கடந்து Rheinau நகரினைச் சென்றடைந்து, தொடர்ந்தும் பிரான்சிற்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதியினை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொட்டொலிகளோடு பயணிக்கும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வேணவாவினை உரமேற்று மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply