பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் உரையை நேரடியாக பார்வையிட்ட மில்லியன் கணக்காண மக்கள் சாதனை!

You are currently viewing பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் உரையை நேரடியாக பார்வையிட்ட மில்லியன் கணக்காண மக்கள் சாதனை!

நேற்று இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பல மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.  கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததில் இருந்து மூன்றாவது ஜனாதிபதியின் உரை இதுவாகும்.

இந்த உரை நேற்று தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.  மொத்தமாக 36,7 மில்லியன் மக்களால் நேரடியாக பார்வையிடப்பட்டுள்ளது.

இது ஒரு புதிய சாதனையாகும்.  கடந்த மார்ச் 12 ஆம் திகதி மக்ரோன் நாட்டுக்களுக்கு ஆற்றிய உரையினை 25 மில்லியன் மக்கள் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள