பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாட்டுக்குள் செல்ல தடை!

You are currently viewing பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாட்டுக்குள் செல்ல தடை!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கிய ரஷ்யா, முக்கிய நகரங்கள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் இன்னும் உக்ரைன் – ரஷ்யா போர் நின்றபாடில்லை. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் அவ்வப்போது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ள நிலையில் அங்கிருந்து 900 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

0 நாட்களுக்கு மேல் தாக்குதல்களை தொடர்ந்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என உலக நாடுகளை உக்ரைன் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் பிரிட்டன் அரசு செய்து வருகிறது. ரஷ்யாவிற்கு எதிராக பிரிட்டன் பொருளாதார தடையும் விதித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் சூழலில், போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டது.

அண்மையில், உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிக்காட்டும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பேசியிருந்தார். அப்போது, உக்ரைன் மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யப் படைகள் குண்டு வீசிய நிகழ்வை அடுத்து, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments