ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
குறித்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை தொடர்பானதாகும். அதாவது, ஜேர்மனி புலம்பெயர்வோரை போலந்து நாட்டுக்குள் அனுமதிப்பதாக வலதுசாரி அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளன.
அரசு, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் அமைந்துள்ள 52 இடங்கள் மற்றும் லிதுவேனியா எல்லையிலுள்ள 13 இடங்களில் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புச் சோதனைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே, ஜேர்மனி தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஆக, இந்த மூன்று நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதனால், இந்த மூன்று நாடுகளுக்கும் செல்லும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில், இந்த நாடுகளுக்குச் செல்லும்போது, எல்லைகளில் உங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் பிரித்தானியர்கள் அதிக அளவில் சுற்றுலாவுக்காக செல்கின்றார்கள்.






