பிருத்தானியாவில் கொரோனா : பிரதமர் போரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா : பிரதமர் போரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன்(Boris Johnson) நோய்வாய்ப்பட்டதன் விளைவாக, மேலதிக கோவிட் -19 பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Sky News தெரிவித்துள்ளது.

இவர், கொரோனா வைரஸ் சோதனையில் நேர்மறை முடிவு கிடைத்து பத்து நாட்களுக்குப் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிருத்தானிய தொலைக்காட்சி நிறுவன கூற்றுப்படி, பிரதமருக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருப்பதாகவும் , மேலும் அவரது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது .

இந்த மருத்துவமனை அனுமதி, அவசர நடவடிக்கைக்கு பதிலாக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது, மேலும் Sky News தகவலின்படி , பிரதமர் தொடர்ந்து அரசை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Sky news

பகிர்ந்துகொள்ள