பிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்
செபஸ்டியன்பிள்ளை கொரேனா தொற்று நோயினால் கடந்த சனிக்கிழமை இறந்துள்ளார்.
மருத்துவ ஆலோசகர் அன்டன் செபஸ்டியன்பிள்ளை கிங்ஸ்டன் மருத்துவமனையில் மார்ச் 31 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை காலமானார்.

மருத்துவ ஆலோசகர் செபாஸ்டியன் பிள்ளை இலங்கையின் பெரடேனியா மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்று 1967 இல் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
