தமிழீழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரித்தானியாவில் 19/11/2023 அன்று நடைபெற்றது.
மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குபிராந்திய மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய மகளிர் துறைப் பொறுப்பாளர் – திருமதி . வசந்தகுமாரி சிவசூரியன் அவர்கள் பொது சுடரினை ஏற்றி வைக்க நிகழ்வானது ஆரம்பமானது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரும் ,லெப்டின்ற் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரருமான திரு .கமல் அவர்கள் தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை ஈகைப்போரொளி முருகதாஷ் அவர்களின் பெற்றோர்கள் பெற்றோர்கள் திரு திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தைதை தொடர்ந்து அகவணக்கம், திரு உருவத்திற்க்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் நளாயினி அவர்களின் சகோதரி ஆனந்தனாயகி யெயகாந்தன் அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து பொது மக்களும் வணக்கம் செலுத்தினார்கள்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மேற்குபிராந்திய மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் நீண்டகால தேசிய பணியாளர் திரு கருணானிதி கனகரத்தினம் அவர்கள் பொது சுடரினை ஏற்றி வைக்க நிகழ்வானது ஆரம்பமானது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நீண்டகால தேசிய பணியாளர் திரு . யோகானந்தன் யோகசிறீதரன். அவர்கள் தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை லெப்டினன் மதிவானன் அவர்களின் சகோதரி தவராணி அவர்கள் ஏற்றிவைத்தைதை தொடர்ந்து அகவணக்கம், திரு உருவத்திற்க்கான மலர்மாலையினை 2ம் லெப்டினன் கேணல் சுடர்விழி அவர்களின் சகோதரி மேரி யூலியான அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து பொது மக்களும் வணக்கம் செலுத்தினார்கள்.










