ரஷ்யாவின் 86 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடை உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகள் போன்றவை இணைந்து ரஷ்யாவின் மீது அடுக்கடுக்கான பொருளாதார தடைகள் விதித்தனர்.
ரஷ்யாவின் மீதான இந்த பொருளாதார தடைகள் உலக வர்த்தகத்தை பெரும் அளவு பாதித்து இருந்தாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதல் தொடர்வதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதார தடைகளை இன்றுவரை விலக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து பிரித்தானியா, ரஷ்யாவின் முக்கிய 86 நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அதனடிப்படையில் Rosatom நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில், Polyus, Severstal, FESCO, MMK, OMK, TMK, RMK, AFK Sistema, Rosbank, DOM. RF மற்றும் Tinkoff bank ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.