ரஷ்யாவிடம் முற்றாக வீழ்ந்த உக்ரைனின் “Bakhmut”! ரஷ்ய அதிபர் வாழ்த்து!!

You are currently viewing ரஷ்யாவிடம் முற்றாக வீழ்ந்த உக்ரைனின் “Bakhmut”! ரஷ்ய அதிபர் வாழ்த்து!!

உக்ரைனின் “Bakhmut” பிரதேசம் முற்றாக ரஷ்ய வசம் வீழ்ந்துள்ளதாக “Reuters” செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து இவ்விடத்தை கைப்பற்றுவது ரஷ்யாவின் பிரதான திட்டமாக இருந்தாலும், உக்ரைனின் எதிர்ப்பு நடவடிக்கைள் காரணமாக, ரஷ்யாவால் “Bakhmut” இன் பகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்திருந்த நிலையில், இப்போது, “Bakhmut” முற்றாக ரஷ்ய வசம் வீழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும், ரஷ்ய தனியார் இராணுவப்படையான “Wagner” படையணியின் தலைவரால், ரஷ்ய அதிபருக்கு முறைப்படி இந்த வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்ய அதிபர் மேற்படி படையணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, படையணியின் அனைத்து இராணுவத்தினருக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார்.

சுமார் எட்டு மாதகாலமாக “Bakhmut” பிரதேசத்தை கைப்பற்ற நடந்த போரானது, உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் மிக இரத்தக்களரி மிகுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments