பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!!

You are currently viewing பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை” ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று 4 மணியிலிருந்து 7 மணி வரை பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக புலம் பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். ஸ்ரீலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச சமூகம் இன்னமும் பாராமுகமாக இருக்காது, விரைந்து தமிழர் விவகாரத்தை கையிலெடுத்து தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள