05-05-1976 அன்று அறம் நின்று பேர் எழுச்சி கொண்ட இன்றைய நாளில் 05-05-2020 பிரித்தானிய NHS மருத்துவ பணியாளர்களுக்கான மனித நேய உணவை வழங்கிய பிரித்தானிய வாழ் தமிழர்கள்!
இன்றைய உலகம் பேரிடரில் இருந்து மனித உயிர்களை மீட்க தன்னிடம் உள்ள அதி நவீன மருத்துவ வளங்களையும் அதன் விரிவாக்கத்திற்கான அதியுச்சஆய்வுகளை வழங்கியும், தேடியும் வருகின்ற சமகாலத்தில்
அறமும் மனித நேயமுமற்ற சிங்கள பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டு உயிர் காக்க உணவிற்கும் குருதிக்குமாக ஒரு தேசிய இனம் உலகத் தலைநகர் எங்கும் உயிர்க் குரல் எழுப்பிய போதும் சுய நலம் கொண்ட வல்லரசுகள் தங்கள் இதயக்கதவுகளையும் கண்களையும் மௌனமாக மூடி இனப் படுகொலையின் உச்சத்தை தொட்ட மே 18 முள்ளிவாய்க்கால் நாளையும், உரிமைக்காக களத்தில் இறுதிவரை அறம் தாங்கிப் போராடிய தேசிய மக்கள் இயக்கத்தின் ஆயுத மௌனிப்பு காலத்திலும் பயணிக்கும் நாம், பல்லாண்டுகால மனிதநேய வரலாற்றை பதிவு செய்துவரும் தமிழ் தேசிய இனம் ‘உயிர் ஈந்தும் அறமும் மனித மாண்பும் காத்து நிற்போம் ‘என்ற எமது தேசிய தலைவரின் நிதர்சனமாக, தாயக உறவுகளுக்கு உதவி வரும் நாம்
வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயிர் இருப்பை துறந்து சக மனித உயிர்ப்பிற்காக களப்பணி ஆற்றிவரும் NHS தியாகப் பணியாளர்களை, அன்று சிங்கள தேசம் முள்ளி வாய்க்காலில் நவீன வல்லரசுகள் வழங்கிய அதி நவீன இரசாயன ஆயுதங்களை எமது மக்கள் மேல் ஏவியும்,உணவு மற்றும் மருத்துவ வளங்களைத் தடுத்து அவை அனைத்தையும் இனப்படு கொலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்திய போதும் இதே NHS கட்டமைப்பிடம் தற்சமயம் இருக்கும் வளங்களில் எவையும் அற்ற கற்பனைக்கெட்டாத தியாகப் பணியிடர் காலத்தில் மிகச் சில வைத்தியர்களும்
களப்பணி மருத்துவப் போராளிகளும் குண்டு மழைக்குள் ஆற்றிய அப்பளுக்கற்ற பணியை, கொத்துக் கொத்துக் கொத்தாக இறந்தவர் போக உலகெங்கும் வாழும் எமது உறவுகள் எண்ணிப் பார்க்கும் இதே வேளை
பிரித்தானியா உட்பட பல நாடுகளில் எமது இனம் சார்ந்த தமிழ் மருத்துவர்கள் பணியாற்றி வருவதை NHS கட்டமைப்பு மேன்மையாக பார்க்கின்ற இவ் வேளையில் NHS பணியாளர்களுக்கான உணவு வழங்கும் மனித நேய உதவிப் பணியை தமிழ் தேசிய மக்கள் சார்பாக இன்று வழங்கி உள்ளோம்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழு
பிரித்தானியா










