கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நடப்பாண்டு இறுதி வரை தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு பிருத்தானிய மக்களுக்கு அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.
பிருத்தானியாவில் இதுவரை கொரோனாவுக்கு 133,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 18,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டன் மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும், அரசின் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்த நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.